Followers

Thursday, 27 October 2011

தோல்வியடைந்தும் மக்களுக்கு ஸ்வீட் கொடுத்த திமுக வேட்பாளர்!

 
 
 
வடமதுரை பேரூராட்சி கவுன்சிலர் தேர்தலில் தோல்வியடைந்த திமுக வேட்பாளர் மக்களுக்கு ஸ்வீட், கார வகைகளை வழங்கி நன்றி தெரிவித்தார்.
 
கடந்த உள்ளாட்சித் தேர்தலில் திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை பேரூராட்சி 11வது வார்டில் அதிமுக சார்பில் செந்திலாண்டவர் என்பவரும், திமுக சார்பில் மாரியப்பன் என்பவரும் போட்டியிட்டனர்.
 
இதில், அதிமுகவைச் சேர்ந்த செந்திலாண்டவர் வெற்றி பெற்றார். மாரியப்பன் 101 ஓட்டுக்கள் பெற்று தோல்வியடைந்தார். தோல்வி கண்டு துவளாத திமுக வேட்பாளர் மாரியப்பன் போட்டியிட்ட வார்டு பகுதியில் உள்ள வீடுகளுக்கு சென்று நன்றி அறிவிப்பு நோட்டீஸ் உடன், ஸ்வீட், மிக்சர் பாக்கெட்களை வழங்கி நன்றி தெரிவித்தார்.
 
அதனை பெற்றுக் கொண்ட வாக்காளர்கள் 'அடடே இவரைப் போய் தோல்வியடை செய்து விட்டேமே' என காமெடி நடிகர் வடிவேல் பாணியில் வருந்தினர். ஸ்வீட் பாக்கெட்டுகளை நன்றியோடு பெற்றுக் கொண்டார்கள்.




No comments:

Post a Comment