Followers

Thursday, 27 October 2011

பரிதி இளம்வழுதி ராஜினாமா ஏற்பு: தி.மு.க. துணைப்பொதுச்செயலாளராக வி.பி.துரைசாமி நியமனம்

 
 
 
தி.மு.க. துணைப்பொதுச்செயலாளர் பதவியில் இருந்து பரிதி இளம்வழுதி விலகிவிட்டதால் அவரின் ராஜினாமா ஏற்கப்பட்டு, அவருக்கு பதிலாக தி.மு.க. துணைப் பொதுச்செயலாளராக வி.பி.துரைசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.
 
தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
 
தி.மு.க. சட்டதிட்ட விதி-22, பிரிவு 1-ன்படி ஏற்கனவே பணியாற்றி வந்த தி.மு.க. துணைப்பொதுச்செயலாளர் பரிதி இளம்வழுதி தனது பொறுப்பில் இருந்து விலகிவிட்ட காரணத்தால், அவரது விலகல் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அவருக்கு பதிலாக வி.பி.துரைசாமி தி.மு.க. தலைமைக்கழகத்தால் துணைப்பொதுச்செயலாளராக நியமிக்கப்படுகிறார்.
 
இவ்வாறு க.அன்பழகன் கூறியுள்ளார்.
 
க.அன்பழகன் வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில், தி.மு.க. சட்டதிட்ட விதி-31, பிரிவு 8-ன்படி தி.மு.க. ஆதிதிராவிடர் நலக்குழு இணைச்செயலாளராக பணியாற்றி வந்த வி.பி.துரைசாமிக்கு பதிலாக, ஆ.கிருஷ்ணசாமி தி.மு.க. ஆதிதிராவிடர் நலக்குழு இணைச்செயலாளராக நியமிக்கப்படுகிறார் என்று கூறியுள்ளார்.



No comments:

Post a Comment