Followers

Friday, 28 October 2011

முன்னாள் பிரதமர் தேவே கௌடா மீது ஊழல் வழக்கு பதிவு

 
 
 
கிருஷ்ணா நதிநீர் திட்டத்தில் பணிகள் ஒதுக்கியதில் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறி முன்னாள் பிரதமர் தேவே கௌடா மீது சிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
 
கடந்த 1995ம் ஆண்டு கர்நாடக முதல்வராக இருந்தபோது தேவே கௌடா கிருஷ்ணா நதிநீர் திட்டப் பணிகளை பிரித்துக் கொடுத்ததில் முறைகேடு நடந்துள்ளது என்று புகார் தெரிவிக்கப்பட்டது. அவர் இந்த திட்டம் தொடர்பான நூற்றுக்கணக்கான ஒப்பந்தங்களில் யாரையும் கலந்தாலோசிக்காமல் ஒரே இரவில் கையெழுத்திட்டுள்ளார். ரூ. 400 கோடி மதிப்பிலான பணிகளை தேவே கௌடா தனியார் கான்டிராக்டர்களுக்கு கொடுத்துள்ளார். இது குறித்து சோமசேகர ரெட்டி என்பவர் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
 
அவரது மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுக்கு உத்தரவிட்டது. இதையடுத்து சிஐடி போலீசார் தேவே கௌடாவுக்கு எதிராக வழக்கு பதிவு செய்துள்ளனர்.
 
கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு பிரச்சனையாகி ஒடுங்கிய விஷயம் தற்போது மீதும் தேவே கௌடாவுக்கு தலைவலி ஏற்படுத்தியுள்ளது. இந்த ஊழல் தேவே கௌடா பிரதமாராக பதவி ஏற்பதற்கு முன்பு நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
 
ஊழல் வழக்குகளில் சிக்கி கர்நாடக முன்னாள் முதல்வர் எதியூரப்பா ஒரு பக்கம் சிறையில் இருக்க மறுபக்கம் தேவே கௌடா மீது ஊழல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.



No comments:

Post a Comment