Followers

Thursday, 27 October 2011

அதிமுகவினர் இடையே மோதல்: எம்.ஜி.ஆர். சிலை உடைப்பு

 
 
 
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தை அடுத்துள்ள கம்மாபுரத்தில் துணை தலைவர் பதவிக்கு யார் போட்டியிடுவது என்று அதிமுகவைச் சேர்ந்த 2 கோஷ்டிகள் மோதிக் கொண்டன. இதில் அப்பகுதியில் இருந்த எம்.ஜி.ஆர். சிலை உடைக்கப்பட்டுள்ளது.
 
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தை அடுத்துள்ளது கம்மாபுரம். அங்கு துணை தலைவர் பதவிக்கான போட்டி நடக்கவிருக்கிறது. அதில் நான் தான் போட்டியிடுவேன் என்று ஒரு கோஷ்டியும், இல்லை நான் தான் போட்டியிடுவேன் என்று இன்னொரு கோஷ்டியும் அடம்பிடிக்கிறது. இதனால் இந்த 2 கோஷ்டிகள் இடையே திடீர் என்று மோதல் ஏற்பட்டது.
 
இதனால் அப்பகுதியில் இருந்த எம்.ஜி.ஆர். சிலை உடைக்கப்பட்டுள்ளது. யார் உடைத்தது என்று கேட்டால் இரு கோஷ்டியினரும் ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டுகின்றனர்.
 
இது குறித்து தகவல் அறிந்த அமைச்சர் செல்வி ராமஜெயம் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்.



No comments:

Post a Comment