Followers

Friday 28 October 2011

அ.தி.மு.க.வுடன் கூட்டணியா? மதுரையில் அத்வானி பேட்டி

 
 
 
பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி இன்று மதுரையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
 
கே:- ஊழலுக்கு எதிராக போராடும் நீங்கள் உங்கள் கட்சியை சேர்ந்த கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா, ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறித்து உங்கள் கருத்து என்ன?
 
ப:- கர்நாடகாவில் லோக் ஆயுக்தா அமைக்க முதலில் போராடியது பாரதீய ஜனதா தான். பாரதீய ஜனதாவை சேர்ந்தவர்கள் ஊழலுக்கு துணைபோனால் கட்சி அவர்களிடம் மென்மையான போக்கினை கடைப்பிடிக்காது.
 
கே:- கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பாக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருவது குறித்து உங்கள் நிலைப்பாடு என்ன?
 
ப:- பொதுவாக அணுமின் நிலையங்கள் அமைக்கப்படும்போது மிக எச்சரிக்கையுடன் நடத்த வேண்டும். ஜப்பான் அணுஉலை விபத்திற்கு பிறகு பல்வேறு நாடுகள் பாதுகாப்பு அம்சத்தை கருத்தில் கொண்டு கடலோரத்தில் உள்ள தங்களின் அணுஉலையை மறு சீரமைப்பு செய்து வருகின்றன.
 
கூடங்கும் அணுமின் நிலையம் பாதுகாப்பையும் மத்திய அரசு மறுஆய்வு செய்ய வேண்டும். அணுமின் நிலையம் அமைக்கும்போது பொதுமக்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் தர வேண்டும். மேலும் மத்திய அரசு பொதுமக்களின் பாதுகாப்பை பராமரிக்க எச்சரிக்கையுடன் நடக்க வேண்டும்.
 
கே:- ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 3 பேருக்கு கருணை மனு பரிசீலிக்க வேண்டும் என்பது குறித்து உங்கள் கருத்து?
 
ப:- பாராளுமன்ற தாக்குதல் மற்றும் தேசிய தலைவர்கள் கொல்லப்பட்ட சம்பவங்களில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை வழங்கும் அதிகாரம் கோர்ட்டுக்குதான் உள்ளது. இதற்கு அரசியல் ரீதியாக அணுகக்கூடாது. தனிப்பட்ட மனுதரின் கருணை மனு என்றால், கருணை காட்டலாம். ஆனால் இதுபோன்ற சம்பவங்களில் ஈடு பட்டவர்களுக்ஙகு கருணை காட்டக்கூடாது.
 
கே:- வருகிற பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வுடன் கூட்டணி ஏற் படுமா?
 
ப:- மத்தியில் கூட்டணி ஆட்சி என்பது தவிர்க்க முடியாததாகி விட்டது. தனிக்கட்சி ஆட்சி என்பது இல்லை. வருகிற பாராளுமன்ற தேர்தலில் ஒத்தக்கருத்து உள்ள கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது குறித்து அப்போது முடிவு செய்யப்படும்.
 
இவ்வாறு அவர் கூறினார்.



No comments:

Post a Comment