மதுரை: தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த போது மின்னல் தாக்கி இறந்தவரின் குடும்பத்திற்கு மதிமுக சார்பில் ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது.
இதுகுறித்து மதிமுக தலைமை கழகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் உள்ள கரிசல்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ்(35). இவர் கடந்த மாதம் 14ம் தேதி மதிமுக கூட்டப் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது மின்னல் தாக்கி இறந்தார்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தை முடித்துவிட்டு நாகராஜ் வீட்டிற்கு சென்று, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். நாகராஜ் மனைவி சங்கரேஸ்வரியிடம் ஒரு லட்சம் ரூபாய் நிதி வழங்கினார். அவரது குழந்தைகள் கனகராஜ், கவுசல்யா 2 பேரையும் தனது சொந்த செலவில் படிக்க வைப்பதாகவும் உறுதி அளித்தார்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment