Followers

Monday, 17 October 2011

அதிமுக அமைச்சர் - எம்.எல்.ஏ மோதல்

 
 
 
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளராகவும் அமைச்சராகவும் இருப்பவர் அக்ரி.கிருஷ்ணமூர்த்தி. இவர் உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய அமைச்சர் என்ற முறையில் வந்தவாசி, செய்யார் போன்ற பகுதிகளுக்கு சென்றார்.
 
போளுர், வந்தவாசி, ஆரணி, செய்யார் போன்ற பகுதிகளில் அதிமுகவில் வடக்கு மாவட்டமாக பிரித்து அந்த பகுதிக்கு மா.செவாக முக்கூர்.சுப்பிரமணியை தலைமை நியமித்துள்ளது. இவர் செய்யார் எம்.எல்.ஏவாகவும் இருக்கிறார்.
 
கடந்த 13ந்தேதி வந்தவாசி நகர மன்ற தலைவர் மற்றும் கவுன்சிலர்களுக்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய சென்றார். அமைச்சருடன் வந்தவாசி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ குணசீலன் இருந்தார். வந்தவாசி நகரில் பிரச்சாரம் செய்ய பிரச்சார வேனில் ஏறினார் அமைச்சர் அக்ரி.
 
அவருக்கு பின்னால் வாகனத்தில் ஏற முயன்ற முக்கூர். சுப்பிரமணியை பிடித்து இழுத்த எம்.எல்.ஏ குணசீலன், இந்த தொகுதிக்கு நான் தான் எம்.எல்.ஏ நீ நடந்து வா என இழுத்துவிட்டுவிட்டு வண்டியில் ஏறினார்.
 
இதில் அவமானமான மா.செவும், எம்.எல்.ஏவுமான முக்கூர், நான் இந்த மாவட்ட செயலாளர் எனக்கப்பறம் தான் நீ தெரிஞ்சிக்க எனச்சொல்ல, யோ போய்யா, நீ என்ன பெரிய இவனா என் ஊர்ல நான் தான் பெரிய ஆளு தெரிஞ்சிக்க, மீறி பேசுனா அடி விழும் என எச்சரிக்க இதை வேடிக்கை மட்டுமே பார்த்தார் அமைச்சர்.
 
இதில் அதிருப்தியான வடக்கு மா.செ முக்கூர்.சுப்பிரமணி நடந்தே வாக்கு கேட்டு வந்தார். அமைச்சரும், அந்த தொகுதி எம்.எல்.ஏவும் வண்டியில் ஏறி பிரச்சாரம் செய்து வந்தனர். இது முக்கூர் ஆதரவாளர்களை அதிருப்தியடைய வைத்துவிட்டது.
 
14ந்தேதி செய்யார் நகருக்கு பிரச்சாரத்துக்கு வந்த அமைச்சரிடம், நீங்க எப்படி என்னை அவமானப்பட விடலாம். உங்களாள தான் ஒரு எம்.எல்.ஏ என்னை மதிக்கமாட்டேன்கிறான் என தனது வருத்தத்தை பதிவு செய்துள்ளார்.
 
நான் அமைச்சர், என்கிட்டயே நீ கேள்வி கேட்கறியா என செய்யார் நகரில் பிரச்சாரம் செய்த அமைச்சர் அந்த தொகுதி எம்.எல்.ஏவும், வடக்கு பகுதி மா.செவுமான முக்கூர்.சுப்பிரமணியத்திடம் சரியாக பேசவில்லை.
 
மூன்று தரப்பும் நடந்ததை ஜெ வுக்கு புகாராக அனுப்பியுள்ளார்கள். இவுங்க சண்டையில எங்கள தோற்கடிச்சிடுவாங்க போலயிருக்கே என வந்தவாசி, செய்யார் பகுதி வேட்பாளர்கள் வருத்ததில் உள்ளனர்.



No comments:

Post a Comment