Followers

Thursday 20 October 2011

உள்ளாட்சியைப் பிடிக்கப் போவது யார்?-தொடங்கியது வாக்கு எண்ணிக்கை

 
 
 
 
 
 
தமிழ்நாட்டில் இரண்டு கட்டமாக நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை வெள்ளிக்கிழமை காலை தொடங்கியது. அதற்கான விரிவான ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மொத்தம் 822 மைங்களில் வாக்குகள் எண்ணப்படும் பணி தொடங்கியுள்ளது.
 
ஊரகப் பகுதிகளில் 400 மையங்களிலும், நகர்பப்பகுதிகளில் 422 மையங்களிலும் வாக்குகள் எண்ணப்படுகின்றன.
 
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மூலம் வாக்குப் பதிவு நடந்த மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சித் தலைவர், உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் முடிவுகள் இன்று மாலைக்குள் வெளியாகி விடும். வாக்குச் சீட்டு முறையில் நடந்த தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியாக நாளை மாலை வரை ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
தமிழ்நாட்டில் 10 மாநகராட்சிகள் அதற்குட்பட்ட 820 வார்டுகள், 125 நகராட்சிகள், 3697 நகராட்சி வார்டுகள், 629 பேரூராட்சிகள், 8303 பேரூராட்சி வார்டுகள், 31 மாவட்ட ஊராட்சிகள், 655 மாவட்ட ஊராட்சி வார்டுகள், 385 ஊராட்சி ஒன்றியங்கள், 6471 ஒன்றிய வார்டுகள், 12524 கிராம ஊராட்சிகள், 99333 கிராம ஊராட்சிகளுக்கான வார்டுகள் ஆகிய 1 லட்சத்து 32 ஆயிரத்து 467 பதவிகளுக்கு 2 கட்டமாக தேர்தல்கள் நடைபெற்றன. இந்த பதவிகளுக்கு மாநிலம் முழுவதும் 4 லட்சத்து 11 ஆயிரத்து 767 பேர் போட்டியிட்டனர்.
 
உள்ளாட்சித் தேர்தலில் இரண்டு கட்டங்களையும் சேர்த்து பதிவான வாக்குகளின் எண்ணிக்கை 78.5 சதவீதமாகும். முதல் கட்டத் தேர்தலில் நாமக்கல் மாவட்டத்தில் அதிகபட்சமாக 85 சதவீதம் வாக்குகள் பதிவாகின. மாநகராட்சிகளைப் பொறுத்தவரை சென்னை குறைவான அளவாக 51.63 சதவீதம் வாக்குகள் மட்டுமே பதிவாயின. வேலூர் மாநகராட்சியில் தான் அதிகபட்சமாக 71 சதவீதம் வாக்குகள் பதிவாயின.
 
சென்னையில்
 
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகள் மற்றும் மேயர் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை 18 மையங்களில் நடைபெறுகிறது. பச்சையப்பன் கல்லூரி, லயோலா கல்லூரி, ராணி மேரி கல்லூரி உள்ளிட்ட பல்வேறு வாக்கு எண்ணும் மையங்களை மாநில தேர்தல் ஆணையர் சோ.அய்யர் சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன், மாநகர காவல் துறை ஆணையர் திரிபாதி உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.
 
மதுரையில்
 
மதுரை மாநகராட்சியில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி 3 மையஙக்ளில் நடைபெறுகிறது. வாக்கு எண்ணும் மையங்களுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
 
வாக்கு எண்ணும் மையங்களுக்குள் செல்போன், இங்க் பேனா உள்ளிட்டவற்றைக் கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.



No comments:

Post a Comment